Categories
உலக செய்திகள்

‘உதவி கரம் நீட்ட வேண்டும்’…. மனிதாபிமான நடவடிக்கைகள்…. தகவல் வெளியிட்ட ஐ.நா.சபை உயர் ஆணையர்….!!

ஆப்கானை விட்டு தப்பி வரும் அனைவருக்கும் உதவி கரம் நீட்டி அழைத்துக் கொள்ளவேண்டும் என்று ஐ.நா.சபை உயர் ஆணையர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக ஆப்கானியர்கள் மத்தியில் பயம் மற்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை காபூல் விமான நிலையத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த சம்பவங்கள் அனைத்தும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் கண்கலங்க வைத்தது என்று ஐ.நா.சபையின் உயர் ஆணையர் Filippo Grandi கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதில் ” இந்த நிகழ்வுகள் அனைத்தும் மறைந்த பிறகும் ஆப்கானிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளின் உதவியை வேண்டி இருப்பார்கள்.

ஆப்கானிஸ்தானில் வாழும் 39 மில்லியன் மக்களில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதிலும் அதிகமானோர் 2௦21ல் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  எனவே உலக அளவில் ஆப்கானிஸ்தானுக்கு உதவும் மனிதாபிமான திட்டங்களுக்கு தொடர்ந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக ஆப்கானை விட்டு தப்பி வரும் அனைவருக்கும் அதன் அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டி அவர்களை அழைத்துக்கொள்ளவேண்டும். இதே போல மற்ற நாடுகளும் மனிதாபிமான பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |