மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜ் தனது வீட்டில் பழுதடைந்து இருந்த மிக்ஸியை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மூச்சு பேச்சில்லாமல் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.