Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் நாய்கள்…. அச்சமடையும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பேருந்து நிலையத்திற்குள் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நாய்கள் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகளை தின்பதற்காக அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் உடுமலை பேருந்து நிலையத்திற்குள் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனையடுத்து சில நேரங்களில் அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு அங்குமிங்கும் ஓடுகின்றன. மேலும் நாய்கள் பேருந்து வளாகத்தில் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கின்றன.

இந்நிலையில் பயணிகள் மற்றும் குழந்தைகள் பேருந்து நிலையத்திற்கு வரும்போது நாய்கள் கடித்து விடக் கூடிய சூழ்நிலை அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |