வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகர் பகுதியில் சாராயம் விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் வினோத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.