கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கலாம். அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகளில் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.