Categories
தேசிய செய்திகள்

கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு…. 7 நாட்களுக்கு கட்டாயம்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதற்கட்டமாக கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளித்தது. ஆனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் தான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் -செப் 6 ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும், கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |