தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதே போல கல்லூரிகளும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. அதேபோன்று கடந்த 3 நாட்களாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.