பாராலிம்பிக் தங்கம் வென்ற சுனில் அண்டிலுக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அரியானா அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் அண்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்துள்ளார். தங்கம் என்று அவருக்கு பல்வேறு தரப்புகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியானா மாநில அரசு அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதேபோல் வட்டு எறிதல் பிரிவில் வெள்ளி வென்ற யோகேஷ் கத்துனியாவுக்கு ரூபாய் 4 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என அரியானா அரசு தெரிவித்துள்ளது.