Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்…. அசத்திய திருப்பதி தேவஸ்தானம்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு விஷயங்களை தேவஸ்தானம் செய்து வருகிறது. அதேபோன்று திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகளின் வசதிக்காக 60 வாடகை கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 40 கார்கள் உள்ளூரிலும், 20 கார்கள் நீண்ட தூர பயணத்திற்கும் பயன்படுத்தபடுகிறது. இந்த கார்களுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகையை தேவஸ்தனம் வழங்குகிறது.

இதன் மூலம் வருடத்திற்கு 1.15 கோடி ரூபாய் செலவாகிறது. மேலும் இதில் எரிபொருள் நிரப்பப்படுவதால் திருமலையில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. இதன்படி டாட்டா நிறுவனத்துடன் கை கொடுத்த தேவஸ்தானம் புதிதாக 35 எலக்ட்ரிக் கார்களை வாங்கி உள்ளது. இந்த கார்களை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால்  250 கிலோ மீட்டர் செல்ல முடியும்.

Categories

Tech |