Categories
உலக செய்திகள்

எறியப்பட்ட ராக்கெட் குண்டுகள்…. இடைமறித்து அழித்த வான்பாதுகாப்பு தளவாடம்…. தகவல் வெளியிட்ட வில்லியம் அர்பன்….!!

காபூல் விமான நிலையத்தை நோக்கி எறியப்பட்ட ராக்கெட் குண்டுகளை அமெரிக்கா வான்பாதுகாப்பு தளவாடம் இடைமறித்து அழித்தது.

அமெரிக்கா கூட்டுப்படைத் தலைமையகத்தின் செய்தி தொடர்பாளரான வில்லியம் அர்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த திங்கட்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ராக்கெட் குண்டுகள் எறியப்பட்டன. இதனை எதிர்க்கும் விதமாக விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த  அமெரிக்காவின் சி-ராம் வான்பாதுகாப்புத் தளவாடம்  செயல்பட்டது. அதிலிருந்து வந்த பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் எதிர்வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து அழித்தது. இதற்கிடையில் காபூல் விமான நிலையம் வழியாக அமெரிக்கர்களையும் அந்நாட்டுக்கு உதவியவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை படைவீரர்கள் தொடர்ந்து மேற்கொண்டனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் காபூல் விமான நிலையத்தில் இருந்துஅமெரிக்கர்கள் திரும்பி அனுப்பப்படுவதாக வெளியான தகவலை ஆப்கானுக்காக அமெரிக்கா தூதர்  ராஸ் வில்சன் மறுத்துள்ளார். இது குறித்து  ராஸ் வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானில் ஆபத்தில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமான பணிதான். ஆனாலும்  இதுபோன்ற சூழலில் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அமெரிக்கர்கள் வெளியே திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்பது  முற்றிலும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று  காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடிபொருள் நிரப்பிய வாகனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வந்தபோது அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் எதிர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது. மேலும் அதில் சிறுவர்கள், காப்பாளர் என்று பலர் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |