சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படவில்லை. இதற்கு அம்மா உணவகம் சாட்சி என்று முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சென்னை கலைவாணர் அரங்கம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.