தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை முதல் 9, 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மாணவர்களுக்கு வகுப்புகள் காலை 9:30 மணி தொடங்கி மாலை 3:30 மணிக்கு முடிக்கப்படும் என்றும், கட்டாயம் மாணவர்கள் கவசம் அணிய வேண்டும். அப்படி அணியாமல் வந்தால் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததுமே அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாது. உளவியல் ரீதியாக மாணவர்கள் தயாரான பிறகே பாடம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.