சீன அரசு அமெரிக்காவிடம், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டின், அரசு செய்தி நிறுவனம், இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சீன வெளியுறவுத் துறை அமைச்சரான, வாங் யீ தொலைபேசியில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரான, ஆன்டனி பிளிங்கனை தொடர்புகொண்டு ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதித்தார்.
அப்போது, அனைத்து நாடுகளும் தலீபான்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுடன் பேச வேண்டும். மேலும், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று கூறினார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்கா வெளியேறினால், அங்கு மீண்டும் தீவிரவாதம் உருவெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்று தான் அஞ்சுவதாகவும் வாங் யீ, பிளிங்கனிடம் கூறியுள்ளார். மேலும் இரு நாடுகளின் உறவு தொடர்பிலும், தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.