ரயில் நிலையத்தில் பெண் உட்பட ஐந்து பேரை வாலிபன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள ஹாரோ கவுன்சிலில் இருக்கும் சிவிக் சென்டரின் அருகே ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4:00 மணியளவில் சண்டை ஓன்று நடந்துள்ளது. இந்த நிலையில் 20 வயதுடைய வாலிபன் ஒருவன் அங்கு நடந்த சண்டையில் பெண்கள் உட்பட 5 பேரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளான். இது குறித்து அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த பெண் உட்பட மற்ற நால்வரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அதிலும் இந்த சம்பவம் தொடர்பாக எவரையும் போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. குறிப்பாக இது குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது ஆதாரங்கள் உள்ளவர்கள் தங்களை நேரில் அணுகுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.