நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாதிப்பு குறைந்தாலும் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் செப்-1 முதல் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அம்மாநிலத்தில் பள்ளிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.