Categories
விளையாட்டு

பாராஒலிம்பிக் : இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் …. இறுதிப்போட்டியில் தோல்வி ….!!!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் தோல்வியை தழுவினார் .

16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் .

இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா 128.5 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்தார். இதனால்  பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவற விட்டார் .இதில் ஈரானை சேர்ந்த சாரே ஜவான்மர்டி 239.2 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார் .இதையடுத்து துருக்கியை சேர்ந்த அய்சிகுல் பெஹ்லிவான்லர் வெள்ளிப் பதக்கமும் , அங்கேரியை  சேர்ந்த கிறிஸ்டினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் .

Categories

Tech |