யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்புவும்,தனுஷும் பாட்டு பாடி அசத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஆகையால் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் நடிகர்கள் தனுஷ்,சிம்பு, என்ஜாயி எஞ்ஜாமி பிரபலம் தீ, அறிவு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் பார்ட்டியில் யுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்புவும், நடிகர் தனுஷும் பாட்டு பாடி அசத்தியுள்ளனர்.
With Enjaami’s .. A billion and a half picture !! pic.twitter.com/zYoIVH5Mvb
— Dhanush (@dhanushkraja) August 30, 2021