Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 வருஷமா குழந்தை இல்லை…. எல்லாரும் ஏமாத்திட்டாங்க…. ஒரே புடவையில் உயிரை விட்ட தம்பதி…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த போடிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதிகள் வரதராஜ்-ஆஷா. இவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால்  சிவராஜுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. சிவராஜ் அரிசிக்கடை மற்றும் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களுடைய வீடு வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இருவரும் ஒரே புடவையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை விசாரணையில் சிவராஜ் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “எங்களுடைய சாவுக்கு யாரும் பொறுப்பு கிடையாது. ஆனால் கடன் கொடுத்த பலர் என்னை ஏமாற்றி விட்டதாலும், குழந்தை இல்லாததாலும் தற்கொலை செய்து கொள்கிறோம்” என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |