ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியிருக்கிறது.
சட்டமன்றத்தில் இன்றைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்க சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்த போதே அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விட்டார்கள். பாரதி ஜனதா கட்சி தங்களுடைய எதிர்ப்பை நிலைப்பாட்டாக தெரிவித்தார்கள் .
முன்னாள் முதலமைச்சர்கள் பெயறில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு அந்த பெயர் அப்படியே தொடர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசினார்கள். இறுதியாக பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கடந்த ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் என மாற்றினார்கள். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை பசுமை வீடு வழங்கும் திட்டம் என மாற்றினார்கள். செம்மொழிப் பூங்காவில் உள்ள கலைஞர் பெயரை நீக்கினார்கள், நாங்கள் பெயர் எடுக்க வேண்டும் என்று நினைக்க வில்லை.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் தான் இருக்கிறது என கூறினார். குரல் வாக்கெடுப்பின் மூலமாக சபாநாயகர் இறுதியாக வாக்கெடுப்பு நடத்தினார். கிட்டத்தட்ட திமுக எம்எல்ஏ, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட் ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இந்த சட்ட முன்வடிவு ஆதரித்தார்கள். எனவே இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன் மூலமாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் இருந்து நீக்கம் செய்யப்படும். அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைந்து செயல்பட இந்த சட்ட மசோதா தெரிவிக்கிறது.