பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
📢 5:55 pm 📢 pic.twitter.com/krUVWXexXH
— Vijay Television (@vijaytelevision) August 31, 2021
இந்நிலையில் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 5:55 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக பிக்பாஸ்-5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பாக தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் அதிகம் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.