Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி செய்வது போல நடிப்பு…. வசமாக சிக்கிய நால்வர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து செல்லும் பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுக்ரவார்பேட்டை பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மைனுதீன் என்பவர் தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவரது அறைக்குள் அதிகாலை நேரத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் புகுந்து மைனுதீனின் செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மைனுதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிருஷ்ணவேணி, அவரது மகன்கள் ரமேஷ், ஆனந்த் மற்றும் உறவினர் சுருளியம்மாள் போன்றோர் மைனுதீனின் வீட்டிற்குள் புகுந்து செல்போனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் வேலை தேடி கோவைக்கு வந்துள்ளனர். ஆனால் போதிய வருமானம் கிடைக்காததால் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது போல சென்று வீடுகளுக்குள் புகுந்து திருடி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |