மழைக்கால தொழில் பாதிப்பு நிதி உதவியாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பல முக்கிய அறிவிப்புகளை தொழில்துறை மற அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு வருகின்றார்.
அந்தவகையில் உப்பள தொழிலாளர்கள் குடும்பத்திற்காக மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரூபாய் 150 கோடி செலவில் 10 சிப்காட் தொழில் பூங்காக்கள் மேம்படுத்தப்படும். திருவள்ளூரில் 250 கோடியில் புதிய தொழில் பூங்கா உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.