ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதால் தலிபான்கள் வானவேடிக்கையுடன் தங்களின் வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு தலிபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். எனவே தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். மேலும் அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவி செய்து வந்தார்கள். எனினும் அமெரிக்க படைகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.
"US military has left Afghanistan," news agency AFP quotes Pentagon pic.twitter.com/bQtwc7x3Sf
— ANI (@ANI) August 30, 2021
எனவே, அதிபர் ஜோ பைடன் காபூல் நகரிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேற ஒப்புக்கொண்டார். அதன்படி, அமெரிக்க தூதரும் ராணுவ அதிகாரிகளும் கடைசி விமானத்தில் நேற்று இரவில் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து மொத்தமாக வெளியேறி விட்டனர். அப்போது அமெரிக்க படையை சேர்ந்த கடைசி வீரர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி சென்ற புகைப்படம் அமெரிக்க ராணுவத்தால் வெளியிடப்பட்டது.
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு, ஐநா சபை, என்ஜிஓக்கள் மூலமாக உதவி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமெரிக்க அரசு உறுதியளித்திருக்கிறது. இதனையடுத்து, மொத்தமாக அமெரிக்கப்படை வெளியேறியதை, துப்பாக்கியால் சுட்டு வானத்தில் கொண்டாடியுள்ளார்கள். மேலும், ஆப்கானிஸ்தான் மொத்தமாக சுதந்திரம் அடைந்ததாகவும் அறிவித்துள்ளனர்.