காட்டெருமை சுற்றுலா பயணிகளின் காரை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் காரில் வெலிங்டன் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் ஏரிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதால் அங்கேயே காரில் இருந்த படி சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை காரை முட்டி சேதப்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் காருக்குள்ளேயே இருந்தபடி அலறி சத்தம் போட்டுள்ளனர். அதன்பிறகு அங்கும் இங்கும் சுற்றி திரிந்த காட்டெருமை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.