Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கணவரை திட்டிய மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் சத்தியகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சத்தியகிரியை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சத்தியகிரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கணவன் இறந்த துக்கத்தில் இருந்த அனிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |