Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவங்க வரக்கூடாது…. விடிய விடிய பணியில் அதிகாரிகள்…. போலீஸ் எச்சரிக்கை….!!

மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடல் பகுதியில் நுழைவதை தடுப்பதற்காக விடிய விடிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் கடலூர் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய முயன்றுள்ளனர்.

அப்போது இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இதனால் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் படகுகளுடன் கடலூர் துறைமுகத்தில் நுழையாதவாறு அதை தடுப்பதற்காக மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன், மேற்பார்வையாளர் அரவிந்தன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், காவல்துறையினர் மற்றும் கடல் சட்ட அமலாக்க பிரிவு சாம்பசிவம் ஆகியோர் துறைமுகம் அருகாமையில் இருக்கும் கடல் பகுதிகளில் இரவு முதல் காலை வரை விடிய விடிய விசைப்படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |