Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்கள், துணிகளை வெளியே எடுத்து வீசினர்.

அதன்பின் மர்மநபர்கள் லாக்கரை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் ஊருக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பாஸ்கர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பாஸ்கர் பாளையங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து திருடிச் சென்ற நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |