Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனையடுத்து முருகன் வேலைக்கு செல்லாத காரணத்தால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக முருகன் மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் முருகன் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த முருகனின் குடும்பத்தினர் பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |