உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடுவதற்காக நேற்று மதுரா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அங்கு கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்ம பூமியில் வழிபட்ட பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மதுரா மாவட்டத்தில் இனி மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இங்குள்ள ஏழு தெய்வீக தலங்கள் புனித தலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்பொழுது அந்த ஏழு தளங்களிலும் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதன் விற்பனைக்கு இந்த ஏழு ஊர்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இனி இந்த இரண்டையும் இந்த ஏழு ஊர்களில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.