Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்ற நபர்.. தரையிறங்கியவுடன் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்.. என்ன காரணம்..?

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர், சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த Vladislav Klyushin என்ற நபர், தனக்குரிய சொந்த ஜெட் விமானத்தில் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது விமானம் தரையிறங்கியவுடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.

அதாவது, இந்த நபர் M13 என்ற நிறுவனத்தினுடைய உரிமையாளர் ஆவார். இந்நிறுவனமானது, ஊடகங்களை மேற்பார்வையிடுவதையும், சைபர் பாதுகாப்பு சேவைகளையும் செய்து வருகிறது. மேலும், இந்நிறுவனத்தின் இணையதளத்தில், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினின் நிர்வாகம் மற்றும் அரசு எங்களது வாடிக்கையாளர் என்று தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இவர் மீது, அமெரிக்காவின் நிறுவனங்களுடைய தரவுகளை திருடியதாகவும்,  இணையதளங்களில் ஊடுருவியதாகவும், உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டினர். எனவே, அமெரிக்க அரசு கோரிக்கை வைத்ததால், சுவிட்சர்லாந்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |