பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பேபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவந்திபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேபி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேபி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் பேபிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேபியை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பேபியை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேபி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.