Categories
மாநில செய்திகள்

இனி இந்த சான்றிதழ்களை…. வீட்டிலிருந்தே பெறலாம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பிரிவில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது துறைரீதியான சான்றிதழ் பெறுவதற்கு வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று திருதுறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தெளிவுரைகள் சம்பந்தப்பட்டவை இணையதளத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்க இ -சேவை மையத்துக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை. இ-சேவை மூலமாக சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை கணினி மூலமாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |