Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில்…. மாணவர்களுக்கு ஆவின் பால் கொடுங்க…. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்…!!!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பசும்பால் 42 ரூபாய் எனவும், எருமைப்பால் 52 ரூபாய் எனவும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுடைய சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை சேர்த்து வழங்க வேண்டும். பால் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Categories

Tech |