பிரபல நடிகர் மனோபாலா முதல் முறையாக ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மனோபாலா. இவர் ஊர்க்காவலன், கருப்பு நிலா, சிறைப்பறவை உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் மனோபாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிஷாந்த் லோகநாதன் இயக்கியுள்ள இந்த வெப் தொடருக்கு ‘மிஸ்டர் உத்தமன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் தொடரில் சச்சின் நாச்சியப்பன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுக்கு தம்பியாக நடித்து பிரபலமடைந்தவர். மேலும் விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்த பிரணிகா தக்ஷு இந்த வெப் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல், காமெடி, பேன்டஸி கலந்து உருவாகியுள்ள மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ‘ஸ்டே டியூன்’ என்ற யூடியூபில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது .