கனடாவில் ஒரு உணவகத்தில், ஆப்பம் மிகவும் பிரபலமான உணவாக பலரையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த, நம் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால், அங்கு சாப்பாட்டிற்காக திண்டாடிய காலகட்டங்கள் இருந்தது. ஆனால், தற்போது நம் நாட்டைச் சேர்ந்த மக்கள் பிற நாடுகளுக்குச் சென்று சிறிதாக உணவகங்கள் தொடங்கி வெளிநாட்டவர்களை ஈர்த்து பெரிய அளவில் முன்னேறி வருகிறார்கள்.
அந்த வகையில், கனடா நாட்டின் Scarborough என்ற பகுதியில் உள்ள Ruchi Take-Out and Catering உணவகத்தில், மிகவும் பிரபலமான உணவாக இருப்பது ஆப்பம். ஆப்பம், நம் நாட்டில் மிகவும் பிரபலமானது என்பது தெரிந்த விஷயம். எனவே, கனடாவில் வசிக்கும் தென்னிந்திய மக்களும் இலங்கை மக்களும் வீட்டு சாப்பாடு நினைவிற்கு வந்தால் உடனடியாக இந்த உணவகத்திற்கு சென்று சாப்பிடலாம்.
காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை ஆப்பம் இடம்பெறுகிறது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, தேங்காய்ப்பால் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றிக்கூட பல வகைகளில் ஆப்பம் தயாரிக்கிறார்கள். அதாவது, பல இடங்களிலும் ஆப்பம் கிடைக்கிறது. எனினும், அவற்றை முன்பே தயாரித்து கன்டெய்னர்களில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த உணவகத்தில் உடனுக்குடன் சூடாக தயாரித்து கொடுக்கிறார்கள். எனவே, மிகவும் ருசியாக இருக்கிறது. அதனை நமக்கு பிடித்த கறியுடன் சேர்ந்து சுவைக்கலாம் என்கிறார், சமூக ஊடகத்தில் பிரபலமான ஒருவர்.