குற்றச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோவில் பகுதியில் தூக்கணாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வட்டமாக நின்று ஒரு கும்பல் பேசி கொண்டிறிந்தை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அதிகாரியை பார்ததும் ஒருவர் மட்டும் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கே இருந்த 6 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் கார்த்திக், கூத்தன், பார்த்திபன், குமரேசன், சக்தி,பார்த்திபன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக சதித்திட்டம் திட்டிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து தப்பி ஓடியது பிரபல ரவுடியான தாடி அய்யனார் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கும்பலைத் சார்ந்த 18 வயதிற்குட்பட்ட 4 பேர் காரணப்பட்டு கோவில் பகுதியில் நின்று குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய ரவுடி அய்யனாரே காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.