ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஜீவி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வெற்றி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார் . மேலும் சர்வதேச பட விழாக்களில் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது .
இந்நிலையில் இது குறித்த தகவலை நடிகர் வெற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் ‘ஜீவி-2’ படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜீவி படத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் கதை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.