Categories
விளையாட்டு

தமிழக வீரர் மாரியப்பன்….. தங்கப்பதக்கத்தை தவற விட்டதற்கு…. இது தான் காரணம்…!!!

பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட மூன்று வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கத்திலிருந்து அமெரிக்க வீரருக்கும், மாரியப்பன் தங்கவேலுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனிடையே மழை வந்ததால், அமெரிக்க வீரருக்கு கடும் சவாலாக இருந்த மாரியப்பன் தங்கவேலு நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாரியப்பன் தங்கவேலுவின் இந்த செயலால் இந்திய பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார். அதேபோன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து வருவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் மாரியப்பன் தங்கவேலு, தான் காலில் அணிந்திருந்த சாக்ஸ் மழையால் நனைந்திருந்ததே அவர் தங்கப்பதக்கத்தை தவிர விட்டதற்கான காரணம் என்று தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் குழு தலைவர் கிருபாகர ராஜா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |