விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கான தீர்மானம் இன்று சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலைவாணர் அரங்கம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளாருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இதில் கரூர் பேருந்து நிலையம் வரை சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர், கடந்த தேர்தலில் அதிமுகவிற்காக பணி செய்தவர்கள் மீது பொய் வழக்குப் போடும் நடவடிக்கை தற்போது நடைபெறுகிறது. தடுப்பூசி முதல் அரசின் நலத்திட்டங்கள் வரை என அனைத்துமே திமுகவினருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் பணியாற்றும் அதிமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் திமுகவிற்கு சந்தா கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். அதை கட்ட தவறியவர்களை பெண்கள் என்று பாராமல் பணியிட மாற்றம் செய்யும் வேலையிலும் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.