Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்…. இன்று ஒரே நாளில்…. 1 கோடிக்கும் மேல் தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினஙக்ளுக்கு முன் இந்தியா 61 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,   நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை எட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று ஒரேநாளில் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |