சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் ஏஞ்சலினா ஆபிராகாம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஏஞ்சலினா ஆபிரஹாம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏஞ்சலினா ஆபிரஹாம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.