அஸ்வின் நடிப்பில் வெளியான அடிபொலி பாடல் வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற ஆல்பம் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
1️⃣0️⃣ Million + Views in 1️⃣0️⃣ Days ♥️
Trending number 1️⃣ for music 🔛 @YouTube#Adipoli is here to stay !
Thank you for the love 🌸
▶️https://t.co/Xn9g1yecmx#ThinkOriginals @i_amak @KusheeRavi @Music_Siddhu@sivaangi_k @Vineeth_Sree @omdop@LyricistVR @sherif_choreo pic.twitter.com/ZasKvwUqs3— Think Music (@thinkmusicindia) August 30, 2021
மேலும் அஸ்வின் நடிப்பில் உருவான அடிபொலி என்ற ஆல்பம் பாடல் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் அஸ்வினுக்கு ஜோடியாக குஷீ ரவி நடித்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் 10 நாட்களில் அடிபொலி பாடல் வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளது.