தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று புதுச்சேரி வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும் பொது பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும். டாஸ்மாக் கடையை திறந்து அதிகமாக மக்களை கூட விடுகிறோம். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு அதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால் நடத்தவே கூடாது என்பதை பாஜக ஏற்காது என்று தெரிவித்துள்ளார்.