வெவ்வேறு பகுதிகளில் சாராய விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறையினர் அரசராம்பட்டு மற்றும் பாவளம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாவளம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த சஞ்சீவ் காந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்பனை செய்த நாகமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.