மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற கார் முகமதின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமதை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான தினேஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.