Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் நின்ற நபர்…. தகராறு செய்த வாலிபர்கள்…. சுற்றி வளைத்த பொதுமக்கள்…!!

வாலிபரிடம் பணம் பறித்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் விக்னேஷை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கோபிநாத் மற்றும் பிரபு என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |