இறைச்சி கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டு இறைச்சி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 3 கிராம் தங்க நகை, குத்துவிளக்கு, பித்தளை பாத்திரங்கள் போன்றவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.