சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சண்முகத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.