Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தோசை செய்து பாருங்க …. உடனே காலியாகிடும் …

கொத்து தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு –  1  கப்

முட்டை – 4

வெங்காயம் – 2

கொத்தமல்லித்தழை –  சிறிதளவு

மிளகுத்தூள்  – 1  டீஸ்பூன்

சீரகத்தூள்  – 1 டீஸ்பூன்

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கொத்து தோசைக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி  மிதமான தீயில் வேகவைக்கவும்.
வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள  வேண்டும் . கடாயில் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . வெங்காயம் வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கி
கடைசியாக மிளகு சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் சூப்பரான கொத்து தோசை தயார் !!!

Categories

Tech |