Categories
தேசிய செய்திகள்

முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி…. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 24.4 சதவீதம் சரிவை சந்தித்தது. தற்போது இந்தியாவில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பி வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டது.

முந்தைய ஜனவரி – மார்ச் காலாண்டில் 1.6% முன்னேற்றம் ஏற்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் மாதம் கொரோனா 2-ம் அலை ஏற்படாமல் இருந்திருந்தால் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரித்து இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |